×

கோவை ஜவுளித்துறையினருக்கு அழைப்பு

 

கோவை, ஜூன் 25: மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம்தேதி முதல் 23ம்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் 3வது உலகளாவிய ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கண்காட்சிக்கான அரங்குகள் முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த கண்காட்சி மும்பை கன்வென்ஷன் அன்ட் எக்சிபிஷன் சென்டர், கோரேகானில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த துணை கருவிகள் என ஏராளமான கருவிகளை காட்சிப்படுத்த உள்ளன.

இது, ஜவுளி உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கான சிறந்த கண்காட்சியாக இருக்கும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் முந்தைய கண்காட்சிகளைவிட அதிநவீன தொழில்நுட்பத்தில் ஏராளமான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இக்கண்காட்சியில் கோவையை சேர்ந்த ஜவுளித்துறையினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post கோவை ஜவுளித்துறையினருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,3rd Global Textile Technology and Engineering Exhibition ,Mumbai ,Dinakaran ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...