×

சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்கள்

 

ஈரோடு, ஜூன் 25: சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னிமலை பேரூராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்கள் மூலம் வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது.

இதில் 5 பேட்டரி வாகனங்களில் பேட்டரி பழுதானதால் நீண்ட காலமாக பேரூராட்சி அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை உரிய நேரத்திற்குள் எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வாகனங்களுக்கு புதிய பேட்டரி பொருத்தப்பட்டு மீண்டும் அந்த வாகனங்களை இயக்க சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennimalai municipality ,Erode ,Chennimalai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை