×

₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம், ஜூன் 25: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக, திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் அளவைப் பொறுத்து, ₹7 முதல் 12 வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனையானது. சுமார் ₹12 லட்சம் அளவிற்கு வர்த்தகம் நடந்தது. கோயில் திருவிழா மற்றும் மாரியம்மன் பண்டிகை நடந்து வருவதால், தேங்காய் தேவையால், விற்பனை அதிகரித்து
காணப்பட்டது.

The post ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Dharmapuri district ,Karimangalam Warachanda ,Sellampatty ,Dinakaran ,
× RELATED 3ம் கட்ட கலந்தாய்வு