×

ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து

ஓசூர், ஜூன் 25: ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், உறுப்பினர்கள் வராததால் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி ரத்து செய்து உத்தரவிட்டார். ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று, ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஓசூர் பிடிஓ (வ.ஊ) குமரேசன், ஊராட்சி ஒன்றிய குழு அலுவலர் (கி.ஊ) சிராஜ் முஹம்மத், ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி ஆகியோர், ஒன்றிய குழு கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டத்திற்கு 4 ஊராட்சி குழு கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். போதுமான எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் வராததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கூட்டம், தொடங்கிய உடனே முடிவுற்றது. தொடர்ந்து அலுவலர்கள் தங்களுடைய இருப்பிடத்திற்கு சென்றனர்.

The post ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Hosur ,panchayat union ,committee ,Hosur panchayat union committee ,president ,Sasi Venkatasamy ,Hosur Panchayat Union ,Dinakaran ,
× RELATED ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்...