×

கல்லூரி முன்பு டூவீலர் திருடிய 2 பேர் கைது

காரிமங்கலம், ஜூன் 25: காரிமங்கலம் அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்(32). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அம்முவை, தொலை தூர கல்வி வாயிலாக சேர்ப்பது குறித்து, காரிமங்கலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரி முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, டூவீலர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வேலங்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டி (23), கணேசன் (33) ஆகிய 2 பேர், டூவீலரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான அவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post கல்லூரி முன்பு டூவீலர் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Nandakumar ,Setipatipatti village ,Ammu ,Karimangalam Government Women's Art College ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை