×

திருவிக நகர் தொகுதி மக்களை ஒரே தாலுகாவில் சேர்க்க வேண்டும்: தாயகம்கவி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 25: பேரவையில் உயர், பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கையின் போது, திருவிக நகர் எம்எல்ஏ ப.தாயகம்கவி (திமுக) பேசியதாவது: திருவிக நகர் தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைத்து தரவேண்டும். திருவிக நகர் தொகுதி மக்கள் பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் என்று 3 தாலுகாவுக்கு பிரிந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், கால விரயம், அலைச்சலால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்த தொகுதி மக்கள் அனைவரும் ஒரே தாலுகாவை பயன்படுத்த வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திருவிக நகர் தொகுதி மக்களை ஒரே தாலுகாவில் சேர்க்க வேண்டும்: தாயகம்கவி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruvik Nagar ,Thayakamkavi ,MLA ,Chennai ,Thiruvik Nagar MLA ,P. ,DMK ,Government Arts College ,Thiruvik Nagar ,Tiruvik Nagar Constituency… ,Constituency ,
× RELATED திருவிக நகர் தொகுதி மக்களை ஒரே...