×

ஆந்திராவில் ஜெகன்மோகன் கொண்டு வந்த நில உரிமை சட்டம் ரத்து: முதல் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

திிருமலை: ஆந்திராவில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஜெகன்மோகன் ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், நில உரிமை சட்டம் ரத்து மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் அமராவதியில் வெலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன்கல்யாண் தலைமையில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

குறிப்பாக தேர்தல் வாக்குறுதியின்படி முதலமைச்சரின் முதல் 5 கையெழுத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது: நில உரிமையாளர்களுக்கு தங்கள் நிலத்தில் உரிமை இல்லாத வகையில் ஏற்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட நில உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத் துறைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. என்டிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை ஜெகன்மோகன் அரசு ஒய்எஸ்ஆர் ஹெல்த் யுனிவர்சிட்டி என பெயர் மாற்றம் செய்தார்.

அது மீண்டும் என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 7 துறைகளில் கடந்த அரசால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலவரம், அமராவதி, மின்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் மணல் கனிம வளங்கள், கலால் மது, சட்டம் ஒழுங்கு, நிதித்துறை என 7 துறைகள் மூலம் மாநிலத்தில் எந்த அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஆந்திராவில் ஜெகன்மோகன் கொண்டு வந்த நில உரிமை சட்டம் ரத்து: முதல் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Jaganmohan ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...