×

ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு கடத்தல் டாடா நகர்’ ரயிலில் ரூ.34 லட்சம் கஞ்சா சிக்கியது: மர்மநபர்களுக்கு வலை

தாவணகெரே: ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு டாடா நகர்’ ரயிலில் கடத்தப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் டாடா நகர் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சித்ரதுர்கா அருகே ரயில் வந்தபோது, அதில் ஏறி சோதனையிட்டனர்.

அப்போது ஒரு பெட்டியில் சோதனையிட்டபோது, கேட்பாரற்று 2 பைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து 2 பைகளில் இருந்த சுமார் 17 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரித்தபோது, ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்மநபர்கள், போலீசாரை கண்டதும், மற்றொரு பெட்டிக்கு சென்றுவிட்டனர் என தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு கடத்தல் டாடா நகர்’ ரயிலில் ரூ.34 லட்சம் கஞ்சா சிக்கியது: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nagar ,Odisha ,Bengaluru ,Tata Nagar ,Dinakaran ,
× RELATED அசோக் நகர், கே.கே.நகர் சாலைகளில் உள்ள...