×

கன்று குட்டியை வேட்டையாடிய சிறுத்தை

குண்டல்பேட்டை: மாட்டு தொழுவத்தில் கட்டிவைத்திருந்த கன்று குட்டியை சிறுத்தை கொன்று தின்ற சம்பவம் குண்டல்பேட்டை அருகே நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகாவின் குருபரஹூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது வீட்டில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் பசு கன்று குட்டியை ஈன்றுள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை மாட்டு தொழுவத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கன்று குட்டியை கொன்று தின்றுள்ளது. இது குறித்து குருசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கிராம மக்கள், பண்டிபுரா வனப்பகுதியின் ஓம்காரா பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என புகார் அளித்தனர்.

The post கன்று குட்டியை வேட்டையாடிய சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Kundalpet ,Guruswamy ,Guruparahundi ,Kundalpet taluk ,Samrajnagar district ,
× RELATED ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு