×

சிறப்பு விசாரணை உத்தரவை எதிர்த்து வழக்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்ததின் மூலம் கர்ப்பம் தரித்தார். இதை தெரிந்து கொண்ட சிறுமியின் தாய் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016 ஜூன் மாதம் புகார் கொடுத்தார். கர்ப்பமாக இருந்த சிறுமியின் ரத்தம் டிஎன்ஏ பரிசோதனை செய்ததின் வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதியாகியது. அதை தொடர்ந்து வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நடத்திய சிக்கமகளூரு மாவட்ட சிறப்பு நீதிமன்றம், கடந்த 2018 ஜூன் 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு நீதிபதிகள் சீனிவாஸ் ஹரிஷ்குமார் மற்றும் சி.எம்.ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.

அதை தொடர்ந்து நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில், சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 12 வயதாக இருந்துள்ளது. குழந்தை பருவத்தில் இருக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது குற்றம். இதை விசாரணை நீதிமன்றம் உரிய ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளதால், தண்டனை வழங்கியுள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். அதே சமயத்தில் ரூ.5 ஆயிரமாக இருந்த அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

The post சிறப்பு விசாரணை உத்தரவை எதிர்த்து வழக்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Bengaluru ,Chikkamagaluru ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த...