×

பெங்களூருவை தொடர்ந்து கலபுர்கி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூரு, விமான நிலையத்தை தொடர்ந்து கல்புர்கி விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் நேற்று விடுக்கப்பட்டது. கல்புர்கி விமான நிலைய இயக்குநரின் இமெயிலுக்கு இந்த மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்தின் அனைத்து பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனை யிட்டனர்.

வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் இது புரளி என்பது உறுதியானது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்ததால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்திற்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது.

அதற்கு முன்பு பெங்களூருவிலுள்ள 17 பள்ளிகளுக்கு இதே போல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் , கல்புர்கி விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை இ மெயில் அனுப்பிய நபர்கள் யார் ?எங்கே இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெங்களூருவை தொடர்ந்து கலபுர்கி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Kalaburki airport ,Bengaluru ,Kalburgi Airport ,Bangalore Airport ,Industrial Security Force ,Dinakaran ,
× RELATED பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை