×

திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு விவகாரம் பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கண்டனம்

பெங்களூரு: திருவள்ளுவர் சிலைக்கு முகமூடி மற்றும் விபூதி குங்குமம் வைத்த செயல்களை பெங்களூரு தமிழ் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என சங்க தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அல்சூருவிலுள்ள திருவள்ளுவர் சிலை, 18 வருட போராட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடக எடியூரப்பா ஆகியோரால் கடந்த 2009ல் திறக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் புகைப்படத்தின் மாதிரியாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழா நடந்த பிறகு வருடந்தோறும் தைப்பொங்கலுக்கு அடுத்து வருகிற திருவள்ளுவர் நாளில் பெங்களூரு தமிழ்ச்சங்கம் தலைமையில் எம்எல்ஏ., எம்பிக்கள், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், திருவள்ளுவர் பூங்காவை சுற்றுலா ஸ்தலமாக மாற்றும் பணி நடந்து வரும் நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு சமூக விரோதிகள் முகமூடி அணிவித்துள்ளனர். அது அகற்றப்பட்ட நிலையில் திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு செயல்களையும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. அதே நேரம் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட நபர்களை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு விவகாரம் பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru Tamil Sangh ,Thiruvalluvar ,Bengaluru ,Bengaluru Tamil Association ,President ,Ko. Damodaran ,Alsuru ,
× RELATED திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு...