×

டிராக்டர் ஏறியதில் தலை நசுங்கி பேராசிரியை பலி மாணவி படுகாயம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த அரவிந்தன் மனைவி அபிராமி (28). தனியார் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை. இவர் நேற்று காலை கல்லூரிக்கு டூ வீலரில் மாணவி ஜனனியை ஏற்றிக்கொண்டு வடகுடி சாலையில் வந்தார். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், டூ வீலர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த அபிராமி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி இறந்தார். மாணவி ஜனனி வலது காலில் பலத்தகாயத்துடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டிராக்டர் ஏறியதில் தலை நசுங்கி பேராசிரியை பலி மாணவி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Aravindan ,Abirami ,Perungadampanur ,Department of Commerce ,Private College ,Vadagudi Road ,Janani ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...