×

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க பேரவையில் தனிச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகள் நடந்து வருவது கவலையளிக்கிறது. கவுரவம், சாதித் தூய்மை என்ற பெயரால் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரின் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட சாதி மறுப்பு இணையரின் பாதுகாப்பிற்கு 9 வழிகாட்டல்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக முதல்வர் இதை பரிசீலனை செய்து சாதி ஆணவப் படுகொலைகளையும், இதுதொடர்பான குற்றங்களையும் தடுப்பதற்கு சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சிறப்பு சட்டம் நடப்பு கூட்டத் தொடரிலேயே இயற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க பேரவையில் தனிச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,K. Balakrishnan ,Chief Minister ,CHENNAI ,Marxist Party ,State Secretary ,M.K.Stalin ,Tamil Nadu ,India ,
× RELATED இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத்...