×

ஈரோடு அருகே பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் பணம், பைக் திருட்டு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சொந்தமாக 25 ஏக்கர் தோட்டம் உள்ளது. அங்கு பண்ணை வீடும் உள்ளது. இதனை சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கவனித்து வருகிறார். இந்த வீட்டுக்கு அவ்வப்போது சுப்புலட்சுமி ஜெகதீசனும், அவரது கணவர் ஜெகதீசனும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை கோவிந்தராஜ் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து மலையம்பாளையம் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், மேஜை பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த ஒரு பைக் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மது குடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஈரோடு அருகே பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் பணம், பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ex ,Erode ,Modakurichi ,Former Union Minister ,Subbulakshmi Jagatheesan ,Chinnammapuram ,Erode district ,Govindaraj ,Dinakaran ,
× RELATED வரும் 26ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்