×

எடப்பாடி மீது மாஜி எம்பி கோவை கோர்ட்டில் வழக்கு

கோவை: எடப்பாடி பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் முன்னாள் எம்பி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘‘நீங்கள் ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்வி கேட்கலாமா? ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒருங்கிணைப்பு குழுவா? கோவையை சேர்ந்த ஒருவர் (கே.சி.பழனிசாமி) ஓபிஎஸ் காலத்தில் தான் அதிமுகவில் உறுப்பினராகவே சேர்ந்தார். உங்களுக்கு விவாத மேடைக்கு ஒரு ஆள் தேவை. அதனால் அவரை வைத்துள்ளீர்கள்’’ என கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி நேற்று கோவை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் (எண் 1) நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.சி.பழனிசாமி கூறுகையில்,‘‘எடப்பாடிஎன்னைப்பற்றி பொய்யான தகவலை கூறி அவதூறாக பேசி உள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன்’’ என்றார்.

The post எடப்பாடி மீது மாஜி எம்பி கோவை கோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Maji ,Goa Court ,Edappadi ,KOWAI ,EDAPADI PALANISAMI ,KOWAI COURT ,Goa Airport ,Archbishop General ,Mataji MP ,Gowai Court ,Dinakaran ,
× RELATED தொடர் தோல்விகளால் எடப்பாடி...