×

அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். ஜனவரி 25ம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்

💠 அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்.

💠 அடுத்த ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.

💠 பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.

💠 தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.

💠 டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

💠 சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்.

💠 ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.

💠 முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

💠 வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.

💠 சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

The post அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Semmozhi Tamil Day ,Minister ,Saminathan ,Chennai ,Tamil Language Day ,MLA ,Fr. ,Happy Tamil Language Martyrs Day ,
× RELATED ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாளாக...