×

பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி மருந்துகள் பெயரை மாற்றி கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமடையச் செய்வதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மருந்துகள் இருப்பு பற்றி வெளிப்படைத்தன்மையுடன் இணைய முகப்பில் உள்ளது. பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷச் சாராய விவகாரத்தில் தொடக்க நாள் முதலே சிறப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. Fomepizole மருந்து கள்ளக்குறிச்சி, சேலம், சென்னையில் இருப்பில் உள்ளது. தேவை என்றால் சேலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி கேட்டு தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பொய் தகவலை கூறி வருகிறார். தவறான தகவலை பரப்பும் எடப்பாடி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதுதான் தார்மீக கடமையாக இருக்கும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

The post பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Edappadi Palaniswami ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...