×

குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்

கன்னியாகுமரி: குமரி கடலில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் கண்டு ரசிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடலின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக சுற்றுலா படகுகளை படகு தளத்தில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் படகு குழாம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் சீரான உடன் சுற்றுலா படகு சேவை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

 

 

The post குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும் appeared first on Dinakaran.

Tags : Kumari Sea ,Kanyakumari ,Vivekananda Mandapam ,Kumari ,Thiruvalluvar ,Sira ,Dinakaran ,
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...