×

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 3 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதே போல வெம்பக்கோட்டை முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின்போது இதேபோன்ற பெண்ணின் தலைப்பகுதி கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண்ணின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தற்போது உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இக்கருவி 53 செ.மீ ஆழத்தில், நீளம் 6 செ.மீ மற்றும் அகலம் 4 செ.மீ கொண்டு காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் அகழ்வாராய்ச்சி பணிகளில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டிருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Krishnagiri ,Vembakota, Virudhunagar district ,
× RELATED தனிநபர்களை தாக்கி பேசுவது...