×

வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும்.. தூத்துக்குடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை : சென்னை, புறநகர் பகுதிகளில் ரூ.36 கோடியில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..

*தூத்துக்குடியில் ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.மழை வெள்ள பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.பேரிடர் அல்லாத காலத்தில் பள்ளிக்கூடங்கள் ஆகவும், சமுதாயக் கூடங்களாகவும் செயல்படும்.

*வெப்ப அலையின் தாக்கத்தினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்.

*வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; உரிய நிவாரணம் வழங்கப்படும்.

*காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக வனத்துறை அலுவலர்களுக்காக ரூ.15 கோடியில் உபகரணங்கள் வழங்கப்படும்.

*ரூ.13.25 கோடியில் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு & அலை சீற்றம் போன்ற பேரிடர்களின் போது பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில், அபாய எச்சரிக்கை அறிவிப்பு & ஒலி எழுப்பும் கருவிகள் நிறுவப்படும்

*பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.105.36 கோடியில் வழங்கப்படும்.

*பேரிடரின்போது ரூ.13.25 கோடியில் அபாய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும்.

*மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ரூ.84 லட்சம் செலவில் 7 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

*1.07 கோடியில் கடலோர மாவட்டங்களில் உள்ள 4960 மீனவர்களுக்கும், 225 மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்கப்படும்.

*பொம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்.

*மதுரை மற்றும் கோவையில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.

*நெல்லை ஊர்க்காடு கிராமத்தில் 1,800 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

*அரக்கோணம் வட்டத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் 500 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

*பட்டா மாற்றம் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும் பொருட்டு “தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம்” அமைக்கப்படும்

*மேலும் இணைய வழிச் சேவைகளின் புள்ளி விவரங்களை கண்காணிக்கும் வகையில், ‘Dashboard’ உருவாக்கப்படும்.பொதுமக்களுக்கு இணையவழிச் சேவைகள் விரைவாகவும், செம்மையாகவும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

*ரூ.2.10 கோடியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பேரிடர் மீட்பு அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, முதலுதவி பயிற்சி மற்றும் இடிபாடுகள், ஆழ்துளை கிணறு, சுரங்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களையும், நீரில் மூழ்கியவர்களையும் மீட்பதற்கான 15 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

*ரூ.6.05 கோடியில் முதலுதவி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் வசிக்கும் 6000 தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படும்

*ரூ.2 கோடியில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை மூலம் சென்னை & புறநகர் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களில் உள்ள 500 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு & நிவாரணம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

*பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.

The post வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும்.. தூத்துக்குடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Minister ,K.K.S.S.R. Ramachandran ,Chennai ,Revenue ,Disaster Management ,KKSSR ,Ramachandran ,
× RELATED தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது...