×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்ரீமதி தாயாரின் வேட்புமனு உள்ளிட்ட 35 மனுக்கள் நிராகரிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட 29 மனுக்கள் ஏற்கபட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட வேட்பு மனு தாக்கலில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 26 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றை தினம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என தெரியவரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு ஜூலை 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்ரீமதி தாயாரின் வேட்புமனு உள்ளிட்ட 35 மனுக்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Srimati Thaya ,Vikrawandi midterm elections ,Vikriwandi ,Dimuka ,Bamaka ,Nam Tamil Party ,Vikriwandi midterm ,Vikrawandi Midterm Election ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக,...