×

அகல் விளக்கு திட்டம், எந்திரனியல் ஆய்வகங்கள், சிறார் அறிவியல் பூங்கா :பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்யப்பட்டது.

அவை பின்வருமாற..

1. அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.

2. சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.

3. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.

5. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.

6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. எந்திரனியல் (ROBOTICS)ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.

8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

9. ஒன்பது முதல் 12-ம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.

10. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.

11. உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

14. ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.

15. இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

16. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.

17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.

21. வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.

22. திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.

24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்

25. இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.

The post அகல் விளக்கு திட்டம், எந்திரனியல் ஆய்வகங்கள், சிறார் அறிவியல் பூங்கா :பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Agal Lighting Project ,Mechanical Laboratories, ,Juvenile Science Park ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Scout ,Dinakaran ,
× RELATED தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர்...