×

ஆரல்வாய்மொழி அருகே பைக்- கார் மோதல் மனைவி, மகள் கண்முன்னே தொழிலாளி பலி

*2 பேர் படுகாயம்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் அருகே பைக் மீது கார் மோதியதில் மனைவி, மகள் கண்முன்னே தொழிலாளி பலியானார். மனைவி, மகள் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோயில் அருகே கோணம் மேல சூரங்குடி பகுதியை சேர்ந்த நாராயண நாடார் மகன் பத்மநாபன் (62). கூலி தொழிலாளி. இவருக்கு அன்னச்செல்வி (52) என்ற மனைவியும், ராஜசிவநாராயணி (19) என்ற மகளும் உள்ளனர். நேற்று மாலை பத்மநாபன் பைக்கில் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு சென்றார். பின்னர் கோயிலில் சாமி தரிதனம் செய்த பின்னர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். அவர்கள் மூவேந்தர் நகர் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மரியநேசன் (71) என்பவர் தனது மனைவி குளோரியுடன் சொகுசு காரில் எதிரே வள்ளியூரிர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பத்மநாபன் வந்த பைக் மீது கார் மோதியது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த போது பத்மநாபன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பத்மநாபனின் மனைவியும், மகளும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் பத்மநாபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தி வருகிறார்கள். மனைவி, மகள் கண் முன்னே விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஆரல்வாய்மொழி அருகே பைக்- கார் மோதல் மனைவி, மகள் கண்முன்னே தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Aralvaimozhi ,Aralvaimozhi Muvendra Nagar ,Narayana ,Khanam Upper Surangudi ,Nagarkoil ,Oral ,
× RELATED ஆரல்வாய்மொழி அருகே நடந்த விபத்தில் பலியான தொழிலாளி மனைவியும் சாவு