×

புலி நடமாட்ட தகவலால் தடை விதிக்கப்பட்ட பைன் பாரஸ்ட் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி : புலி நடமாட்ட தகவலால் தடை விதிக்கப்பட்ட பைன் பாரஸ்ட் பகுதியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் பகுதி உள்ளது. வனத்தை ஒட்டி அமைந்துள்ள இங்குள்ள பைன் மரக்காடுகள் நடுவே சென்று காமராஜர் சாகர் அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் புலி நடமாடிய வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் பாரஸ்ட் பகுதி மூடப்பட்டது.
சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டி வடக்கு வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உலா வந்த புலி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பைன் பாரஸ்ட் பகுதியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

The post புலி நடமாட்ட தகவலால் தடை விதிக்கப்பட்ட பைன் பாரஸ்ட் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty-Kudalur road ,Kamaraj ,Dinakaran ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை...