×

காரியாபட்டி அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு தர்காவில் கந்தூரி திருவிழா

*எம்பி பங்கேற்பு

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பாம்பாட்டி கிராமத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக வழிபாடு செய்துவருகின்றனர்.
இந்த தர்காவில் கடந்த 2001ம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. அதன் பின்னர் 22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு கந்தூரி விழா நடைபெற்றது. விழாவில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி காரியாபட்டி, அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கந்தூரி விழாவில் பங்கேற்றனர்.

காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பழைய பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர்.
இந்த ஊரில் இஸ்லாமியர்கள் இல்லாத நிலையில் கிராம மக்கள் தான் தர்காவை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கந்தூரி விழாவில் கிராம மக்களும் கலந்துகொண்டனர். மேலும் நவாஸ் கனி எம்பி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் ஆர்.கே.செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post காரியாபட்டி அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு தர்காவில் கந்தூரி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kanduri Festival ,Darka ,Kariyapati ,Islamists ,Darqa, Bombati ,Virudhunagar district ,Dharga ,Khanduri Festival ,
× RELATED விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது