×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான்பொருளாதார மேம்பாடு தரவுகள்தெரியும்; முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வன்னிய சமூக மக்களுக்காக பேரவையில் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டத்துறை அமைச்சர் பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:
தமிழகத்தில் பொருளாதார மேம்பாடு பற்றிய தகவல்கள் எல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாகவும், குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பின் மூலமாகவும் தான் தெரியவரும். எனவே ஒன்றிய அரசு இதற்கான அனுமதியை வழங்கவேண்டும். தேசிய ஜனநாயாக கூட்ட்டணியில் பாமக உள்ளது. நீங்கள் அதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும்.மேலும் தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடையாக இருக்காது என அமைச்சர் பதிலளித்தார்.

உள்ஒதுக்கீடு பிரச்சனைக்கு இந்த கூட்டத்தொடரிலேயே தீர்வு காண வேண்டும் என்றால், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்படவேண்டும். அதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரிலேயே ஒரு தீர்மானத்தை கொண்டுவரளாம் என திட்டமிட்டுள்ளோம். அதற்கு பாமக ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார்.

நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் உள்ஒதுக்கீடு அமல்படுத்த முடியும் என முதல்வர் குறிப்பிட்டார். ஏற்கனவே பிகார் மாநிலத்தில் நிறைவேற்றி அதை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு இதற்கு விரைந்து மக்கள் கணக்கெடுப்புடன் தொடர்ந்து ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எடுத்தால் தான் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியுள்ளவர்கள் குறித்து விவரம் தெரியவரும். அதன் அடிப்படையில் தான் உள் ஒதுக்கீடு கொடுக்க இயலும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான்பொருளாதார மேம்பாடு தரவுகள்தெரியும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Sathiwari ,Principal ,Mu K. Stalin ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Vanni ,Parliamentary Assembly Committee ,G. K. Mani ,Minister of Law ,Satiwari ,M.U. K. Stalin ,
× RELATED வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை...