- அமைச்சர்
- தி.R.P.Raja
- பொதுவுடைமைக்கட்சி
- சென்னை
- தி.R.P.Raja
- சிப்காட்
- திருத்துறைப்பூண்டி
- சட்டசபை
- மாரிமுத்து
- திருமுத்துராப்பூண்டி
சென்னை: திருத்துறைப்பூண்டியில் சிப்காட் அமைத்து தருவது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நகைச்சுவை ததும்ப அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரையில் இன்று வினா – விடை நேரத்தின் போது திருத்துறைப்பூண்டி உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான மாரிமுத்து தங்கள் தொகுதிக்கு சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எங்கள் தொகுதிக்கு மருமகனாக கிடைத்தது எங்கள் ஊருக்கு கிடைத்த பெருமை என்றும் நகைச்சுவையாக பேசினார். அதற்கு டி.ஆர்.பி.ராஜாவும் அதே பாணியில் நகைச்சுவையுடன் பதில் அளித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாக ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் மசூதி, தர்காவை பராமரிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். நாகூர் தர்கா ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதேபோன்று தேவாலயங்களுக்கும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
The post மாமனார் – மருமகன்.. அவையில் சிரிப்பலை: கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருக்கு அதே பாணியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்..!! appeared first on Dinakaran.