- கரூர் நகராட்சி பஸ் ஸ்டாண்ட்
- அவதி கருர்
- கரூர் நகராட்சி பஸ் நிலையம்
- கரூர் மாநகராட்சி
- கரூர் நகராட்சி
- பேருந்து நிலையம்
- தின மலர்
* மழை, வெயிலுக்கு ஒதுங்க இடமின்றி அவதி
கரூர்: கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி கூடுதல் வசதி அமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா? என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாநகராட்சியின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. கரூர் பேருந்து நிலையம் கடந்த 1987ம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியான கரூரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களுககும் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. அதேபோல் மாநகரில் உள்ள ஊர்களுக்கு நகர பேருந்துகளும், மினி பஸ்களும், தனியார் பஸ்களும் என பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஜவுளி டெக்ஸ்டைல், பேருந்துகளுக்கு பாடி கட்டுதல், கொசுவலை தயாரிப்பு போன்று மூன்று முக்கிய தொழில்கள் கரூர் மாநகரில் நடைபெற்று வருகிறது. இதனால் கரூர் மாநகருக்கு, வேலை நிமித்தமாக தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ள நிலையில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப, பேருந்து நிலையத்தில் தேவையான வசதிகள் குறைவு காரணமாக பயணிகள் அனைவரும் தினமும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்துக்கு மாற்றாக, கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த பணி தற்போது நடைபெறாமல் உள்ளது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி, மதுரை, மணப்பாறை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுககு செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்த காரணத்தினால் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது, மாற்று ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாத காரணத்தினால், இந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மழை, வெயில் போன்ற சீதோஷ்ணநிலைகளை சமாளித்து காத்திருந்து பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். அவர்களுககு தேவையான எந்தவிதமான ஏற்பாடுகளும் இதுநாள் வரை மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
தற்போது கோடைகாலம் முடிவடைந்து, மழைக்காலம் துவங்கும் நிலையிலும், பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளாத நிலையில், பயணிகள் அனைவரும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
எனவே, கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சில மாதங்களாக அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, கரூர் பேருந்து நிலையத்தில், திருச்சி, மதுரை, திண்டுக்கல் போன்ற பேருந்துகள் நிற்கும் பகுதியில் பயணிகள் நலன் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.