×

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு: கே.ஆர்.பி. அணை அருகே குழி தோண்டி அழிப்பு


கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை ஏற்றி வந்த லாரியை கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை குழி தோண்டி புதைத்து அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரி பட்டினம் திம்மாபுரம், மலையாண்ட அல்லி, வேலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கட்லா, ரோகு,சபாரி போன்ற நண்ணீர் வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். கொடூர குணம் கொண்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் சில இடங்களில் ஐவகை மீன்கள் வளர்க்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதனை அடுத்து காவேரி பட்டினம் அருகே மிட்டஅலி கிராமத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து விற்பனைக்காக லாரியில் ஏற்றி செல்வதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்த நபர்களை மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

 

The post கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு: கே.ஆர்.பி. அணை அருகே குழி தோண்டி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kaveri Pattinam ,Thimmapuram ,Malayanda Alli ,Velampatti ,Katla ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...