×

திருப்பத்தூர் – சங்கேந்தி சாலையில் கொள்ளிடம் குழாயில் உடைப்பு வடிகாலில் வீணாகி வரும் குடிநீர்

முத்துப்பேட்டை முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு கொள்ளித்திலிருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக ஒருபுறம் வண்டுவாஞ்சேரி வழியாக வேதாரண்யம் பகுதிக்கும் மறுபுறம் முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளையும் சென்றடைகிறது.

பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்று அடைகிறது. இந்நிலையில் தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரின் பாதிஅளவு குறைந்து விடுகிறது.

இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக நீண்ட காலமாக முத்துப்பேட்டை பகுதி ஊராட்சி நிர்வாகங்கள கவலையுடன் தெரிவித்து வந்தனர். மேலும் அடிக்கடி இப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது அதனை குடிநீர் வாரியமும் உடனுக்குடன் சரி செய்வதில்லை. இதன் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்பை உடன் சரி செய்யப்படாததால் அப்பகுதியில் தேங்கும் கழிவுநீர் குடிநீரில் கலந்து விடுகிறது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு பலவிதமான தொற்று நோய்கள் பரவி விடுகிறது.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த திருப்பத்தூர் சங்கேந்தி சாலையில் கடுவெளி சந்திப்பு அருகே அப்பகுதியில் கடந்து செல்லும் வடிகால் வாய்க்கால் பாலத்தில் செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீச்சியடித்து வெளியேறி எந்த நேரமும் அங்குள்ள வடிக்காலில் செல்கிறது.
அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடன் சரி செய்ய முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

*நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

The post திருப்பத்தூர் – சங்கேந்தி சாலையில் கொள்ளிடம் குழாயில் உடைப்பு வடிகாலில் வீணாகி வரும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Tirupattur – Sankendi road ,Muthupettai ,Kollidum ,Kollith ,Mannargudi ,Kotur ,Tirupattur ,Mangudi ,Kaduveli ,Sankendi ,Udayur Sambu ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி