×

காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: ஒட்டன்சத்திரம் சந்தையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120க்கும், அவரைக்காய் ரூ.90க்கு விற்பனை!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பக்ரீத் பண்டிகை முடிவடைந்ததால் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளதுடன் சந்தையில் வரத்தும் அதிகரித்துள்ளது.

இதனால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.250க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.120க்கும், ரூ.220க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.90க்கும் விற்கப்படுகிறது. சேனை கிழங்கு, சௌசௌ, புடலங்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பீடுகையில் சரிபாதியாக குறைந்துள்ளது. தக்காளியை தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

The post காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: ஒட்டன்சத்திரம் சந்தையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120க்கும், அவரைக்காய் ரூ.90க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Dindigul ,Dindigul district ,Kerala ,Ottanchatram ,Bakrit festival ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...