×

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஷச்சாராயம் விற்பனை செய்ய முக்கிய வியாபாரி மற்றும் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய வியாபாரிகள் என இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வியூர் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவருக்கு மெத்தனாலை ஆன்லைனில் வாங்கி சப்ளை செய்ததாக மாதேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரியை சேர்ந்த ஷாகுல் அமீர், ஜோசப் ராஜ் கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் ஜோசப் ராஜ், ஷாகுல் அமீர் மற்றும் மாதேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

மாதேஷ் விஷ்ணு என்ற தொழில் நிறுவனத்தின் சார்பாக அவர் ஆன்லைனில் புக் செய்ததும் தெரியவந்தது. மேலும் மெத்தனால் எங்கிருந்து வாங்கப்பட்டது, யார்யார்க்கு சப்ளை செய்தார் என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற காவலில் மாதேஷை எடுக்க இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். நேற்றைய தினம் சென்னையில் மெத்தனால் சப்ளை செய்து வரும் சிவகுமார் என்பவரையும் விரைவில் நீதிமன்ற காவலில் எடுக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய தினம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரை 3 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

 

The post கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : CBCID ,Mathesh ,Kallakurichi ,Karunapuram ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED சென்னை கெமிக்கல் கம்பெனிகளில் போலி...