×

கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!

கோவை: கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலை சிட்ராவில் சா்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, மும்பை, டெல்லி , ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும் நாள்தோறும் 35க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு எப்போதும் அதிக அளவிலான பயணிகள் வந்து செல்வா்.

இந்நிலையில், கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவா் இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ள நிலையில் விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 19ம் தேதி கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

The post கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore airport ,Coimbatore ,Coimbatore International Airport ,Avinasi Road Chitra ,Chennai ,Mumbai ,Delhi ,Hyderabad ,
× RELATED அதிமுக இணைய தலைவர்கள் அழைப்பு...