×

பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான குழு அறிவிப்பை வெளியிடாத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதன். இவருடைய 3 ஆண்டு பதவிகாலம் என்பது வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. பல்கலைகழக சாசன விதிகளின் படி ஆட்சி குழுவின் பிரதிநிதி ஒருவர், ஆட்சி பேரவையின் பிரதிநிதி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் என 3 பேர் கொண்ட ஒரு குழு தேடுதல் குழுவாக அமைக்கப்பட்டு அந்த தேடுதல் குழுவினர் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் 30-ம் தேதி துணை வேந்தர் ஓய்வு பெரும் நிலையில் இதுவரை தேடுதல் குழு அமைக்கப்படவில்லை.

ஏற்கனவே இந்த தேடுதல் குழுவுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பட்டு 20நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இந்த தேடுதல் குழு தொடர்பான அறிப்பை இதுவரை ஆளுநர் மாளிகை அறிவிக்கவில்லை. எனவே இது தொடர்பாக தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்க இது ஒரு காரணமாக கருதப்படுகிறது என பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் கூறியுள்ளது. எனவே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் கண்டன கடிதத்தை வெளியிட்டுள்ளது.

The post பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான குழு அறிவிப்பை வெளியிடாத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor R. N. ,Ravi ,Salem ,Jeganathan ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்