×

வாடகையில் வேளாண் கருவிகள்

புதுக்கோட்ைட, ஜூன்24: கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாடகை அடிப்படையில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் (PACCS as MSC) மற்றும் SMAM திட்டத்தின்கீழ் டிராக்டர், ரொட்டவேட்டர் கலப்பைகள், பவர்டில்லர், விதைப்பு கருவிகள் மற்றும் வைக்கோல் சுருட்டும் இயந்திரம் ஆகிய வேளாண் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் வேளாண் கருவிகள் விவசாமிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேலை பெற, கூட்டுறவு சங்கங்களுக்கு நோடியாக அல்லது கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் http://www.rcs.tn.gov.im என்ற இணையதளத்தில் உள்ள Coop E-vadagai என்பதில் பதிவு செய்தும் மற்றும் உழவன் செயலி மூலமாக வாடகை எந்திரங்கள் பகுதியில் சென்று கூட்டுறவு சங்கங்கள் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு பெற என்ற பகுதியின் விவரங்கள் அறிந்து வேளாண் கருவிகளை குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.ஜீவா தெரிவித்துள்ளார்.

The post வாடகையில் வேளாண் கருவிகள் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai District ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...