×

பெரம்பலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி பேட்டி

பெரம்பலூர்,ஜூன்.24: தகுதி, திறமையின் அடிப் படையில் மாணவர்களை தேர்வு செய்யும் தேர்வு நீட் எனக் கூறுவது தவறான பிரசாரம் என்று பெரம்பலூரில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி கூறினார்.

மதிமுக கட்சியின் பெரம் பலூர் மாவட்டச்செயலாளர் ஜெயசீலனின் மகள் திரு மண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று பெரம்பலூருக்கு வருகை தந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியா ளர்களிடம் கூறியதாவது :
கள்ளக்குறிச்சி கள்ளச் சாரய் உயிரிழப்பு சம்பவத் தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக் களை சொல்லுவதோ, பர பரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய் வதில் யாரும் ஈடுபட வேண் டாம். பாஜ ஆளுகின்ற குஜராத் மாநிலம், பாஜ கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழ் நாட்டில் பாஜவை தவிர அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு கூடாது என்று பல வருஷங் களாக சொல்லி வருகி றோம்.

நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறோம். சட்டப்பேரவை யிலேயே தீர்மானம் கொண்டு வந்திருக்கி றோம். தகுதி, திற மையின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யும் தேர்வு நீட் எனக் கூறுவது தவறான பிர சாரம். கிராமப்புற மாணவர் கள் கோச்சிங் சென்டர் போக முடியாத சூழ்நிலை காரணமாக மருத்துவர் ஆகமுடியாத நிலை உள்ளது. தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரசனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப் பேன் எனத் தெரிவித்தார்.

The post பெரம்பலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,General Secretary ,Durai Vaiko ,Perambalur ,Madhyamk Party ,Peram Balur District ,Jayaseelan ,Madhyamik ,Durai Vaiko MP ,
× RELATED குவைத் தீ விபத்து துரை வைகோ இரங்கல்