×

கோயிலில் திருட முயன்ற கர்நாடக வாலிபர் கைது

ஓசூர், ஜூன் 24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராமநாயக்கன் ஏரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது முனீஸ்வரர், ஜலகண்டேஸ்வரர், ஆதிபராசக்தி, சனீஸ்வரர், நாக தேவதைகள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை குருக்கள் மணிவாசகம் வழக்கம்போல் பூஜை செய்ய வந்தார். அப்போது கோயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கோயில் கதவை பூட்டிவிட்டு, இதுகுறித்து ஓசூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலம் கனகபுர தாலுகா முத்துவாடி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பதும், கோயிலில் திருட வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைதான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி நீக்கம் செய்யப்பட்டவர் என தெரிய வந்தது.

The post கோயிலில் திருட முயன்ற கர்நாடக வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri District ,Osur Ramanayakan Lake ,Muniswarar ,Jalakandeswar ,Atiprashakti ,Saniswarar ,Naga fairies ,Jalakandeswarar temple ,
× RELATED பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு