×

கரூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2ம் கட்ட கலந்தாய்வு

கரூர், ஜூன் 24: கரூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று கலை பாடப்பிரிவு மாணவர்களுக்கும், வருகிற 26ம் தேதி அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் அரசுக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவது குறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் அரசுக் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூன் 24ம்தேதி அன்று கலைப்பிரிவு (பிஏ, பிகாம், பிகாம் சிஏ, பிபிஏ) மாணவர்களுக்கும், ஜூன் 26ம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவு (பிஎஸ்சி) மாணவர்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு, இணைய வழியில் விண்ணப்பித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கில பாடப்பிரிவு தேர்வு செய்யும் மாணவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

கலைப் பிரிவு, அறிவியல் பாடப்பிரிவு தேர்வு செய்யும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர, நான்கு பாடத்தின் கூட்டுத்தொகை 200 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். எனவே, தகுதியுடைய மாணவர்கள் கலந்து கொண்டு உரிய பாடப்பிரிவை தேர்வு செய்து பயன்பெறவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2ம் கட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Karur Govt College ,Karur ,Karur Government College ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...