×

சட்டீஸ்கரில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ளநோட்டு பறிமுதல்: இயந்திரங்களும் சிக்கின

சுக்மா: சட்டீஸ்கரில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ளநோட்டுக்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கோராஜ்குடா கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்த கூட்டுக்குழு நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டது.

அப்போது, பாதுகாப்பு படையினரை பார்த்ததும் அங்கிருந்த நக்சலைட்கள் சிலர் வனப்பகுதியில் தப்பி ஓடினர். அந்த இடத்தில் ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம், பிரிண்டர், இன்வெர்டர் இயந்திரம், பிரிண்டர் மை, 4 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சுக்மா போலீஸ் எஸ்பி ஜி.சாவன் கூறுகையில், ‘‘கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கிடைத்துள்ள முக்கியமான வெற்றி. நக்சலைட்டுகள் நீண்ட காலமாக பஸ்தார் பிராந்தியத்தின் உள்பகுதிகளில் வாரச் சந்தைகளில் கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தி அப்பாவி பழங்குடியினரை ஏமாற்றி வருகின்றனர். மேலும், கள்ள நோட்டுக்களை அச்சடித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

The post சட்டீஸ்கரில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ளநோட்டு பறிமுதல்: இயந்திரங்களும் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Sukma ,Gorajguda ,Sukma district ,Dinakaran ,
× RELATED நக்சல் கண்ணிவெடியில் சிக்கி போலீசார் 2 பேர் பலி