×

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 லாரி டிரைவர்கள் பலி

வேலாயுதம்பாளையம்: கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 லாரி டிரைவர்கள் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி மேல் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (50). இவரது மகன் கார்த்தி (எ) சிவா (24). இவர் கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்களான கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) சதீஷ் (24), பாலமுருகன் (23). லாரி டிரைவர்களான இருவரும் கரூருக்கு வந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் எழுந்து நண்பர் கார்த்தி (எ) சிவாவை பார்த்துவிட்டு மூவரும் குளிப்பதற்காக தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது மணிகண்டன், பாலமுருகன் ஆழமான பகுதிக்கு சென்று குளி்த்தபோது 2 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி மணிகண்டன் மற்றும் பாலமுருகனை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 லாரி டிரைவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Karur ,Velayuthampalayam ,Balamurugan ,Pundi Mell Street, Kodaikanal, Dindigul District ,Karthi (A) Siva ,Attur ,Karur district ,Dinakaran ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா