×

திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட 5 சவரன் தங்க நகை மீட்பு: 4 மணி நேரம் தேடுதலுக்கு பின் ஒப்படைப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் நீராடும்போது பக்தர் தவறவிட்ட தங்க நகையை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சுமார் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜோதி, கார்த்திக்கின் தங்கை வாசுகி ஆகிய இருவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று காலை புறப்பட்டு வந்தனர். இருவரும் கடலில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது வாசுகியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை திடீரென கடலில் தவறி விழுந்தது.

பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் பதறிய அவர் புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சிவராஜா தலைமையில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடலில் சுமார் 4 மணி நேரமாக தீவிரமாக தேடினர். இதில் வேலுச்சாமி என்பவரது கையில் தங்கநகை கிடைத்தது. இதையடுத்து மீட்கப்பட்ட நகையை போலீசார் முன்னிலையில் வாசுகியிடம் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

The post திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட 5 சவரன் தங்க நகை மீட்பு: 4 மணி நேரம் தேடுதலுக்கு பின் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Tricendoor ,Tricendour ,Tricendore ,Karthik ,Thoothukudi ,Jyoti ,Vasuki ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!!