×

விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை

சேலம்: காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து இறந்தார். முன்னதாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதே மனைவி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (22). இவர் அப்பகுதியில் பாஸ்புட் வியாபாரம் செய்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் மேகலா (21). இருவரும் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பூபாலன் விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பூபாலன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் மேகலாவிடம் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மேகலா, கணவர் இறப்பதற்கு முன்பு தான் சாக வேண்டும் என்று நினைத்து அன்றைய தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபாலன் நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Tharamangalam Thottampatti, Salem district ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு