×

நெற்பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

 

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 24: நெற்பயிரில் ஆனை கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறையை வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனை கொம்பன் ஈ தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர்களின் நடுகுருத்து இலை வெள்ளைதண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படும். தாக்குதல் அறிகுறி நாற்றங்கால் பருவத்தில் இருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும். இதனால் பயிர்கள் வளர்ச்சிகுன்றி, வாடி சுருண்ட இலையுடன் காணப்படும். இதனால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.

பூச்சி தாக்குதலால் பொருளாதார சேதநிலை தாண்டும் பட்சத்தில் ரசாயன முறையில் இதனைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு ஏக்கருக்கு பெப்ரோனில் 400 மிலி அல்லது தயோமீத்ராக்ஸின் 40 கிராம் அல்லது கார்போ சல்போன் 40 மிலி அல்லது குளோர் பைரிபாஸ் 500 மிலி இவற்றில் ஏதாவது ஒன்றை 200 மிலி தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிப்பதன் மூலம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெற்பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை appeared first on Dinakaran.

Tags : Srivilliputur ,Kompan Ei ,Nedgyir ,Dinakaran ,
× RELATED வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கேரளாவில் பாஸ்டேக் விதிப்பு..!!