×

விருதுநகர் அருகே தனியார் மில் சுற்றுச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து

விருதுநகர், ஜூன் 24: விருதுநகர் அருகே தனியார் மில் சுற்றுச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுனர் காயமடைந்தார். வேதாரண்யம் பெரிய குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி தனியார் நிறுவனத்தில் இருந்து இருந்து வெண்ணெய் பண்டல்களை ஏற்றிக்கொண்டு நாங்குநேரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை விருதுநகர் சூலக்கரை தனியார் மில் அருகே வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து மில்லின் காம்பவுண்ட் சுவற்றில் மோதியது. இதில் லாரி ஓட்டுனர் சதீஷ்குமார் கண்டெய்னரில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விருதுநகர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சதீஷ்குமாரை மீட்டனர். மேலும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து கொடுத்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே தனியார் மில் சுற்றுச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Satish Kumar ,Vedaranyam Periya Lease ,Alagapuri, Virudhunagar district ,
× RELATED காசோலை மோசடி வழக்கில் திரைப்பட...