×

சாலை விபத்து தடுப்பு குறும்பட விழிப்புணர்வு

 

ராமநாதபுரம், ஜூன் 24:ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளால் நிகழும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் ‘இனியும் வேண்டாம் உயிரிழப்பு’ என்ற பெயரில் 5 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம் தயாா் செய்யப்பட்டது.

இந்த குறும்படம் வெளியிட்டு நிகழ்ச்சி ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில்நடைபெற்றது. எஸ்.பி சந்தீஷ் குறும்படத்தை வெளியிட்டார்.குறும்படத்தில் நடித்த காவல் துறையினர், இயக்குநர், உதவியாளர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இதில், கூடுதல் எஸ்.பி அருண், காவல் துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

The post சாலை விபத்து தடுப்பு குறும்பட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...