×

நித்திரவிளை அருகே மதுபானம் பதுக்கிய 3 பேர் கைது

 

நித்திரவிளை, ஜூன் 24 ; நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், எஸ்.ஐ.க்கள் ஞானசிகாமணி, சந்திரகுமார், தனிப்பிரிவு ஏட்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனையை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது நடைக்காவில் மது பதுக்கி வைத்திருந்த ராஜேஷ் (35), என்பவரை மடக்கி பிடித்து 10 குவார்ட்டர் மது பாட்டிலையும், எஸ்.டி. மங்காடு புதுக்குளம் பகுதியில் மது பதுக்கி வைத்திருந்த பிஜு (41), என்பவரை மடக்கி பிடித்து 8 குவார்ட்டர் மதுவையும், ஆலங்கோடு பருத்திவிளை பகுதியில் மது பதுக்கி வைத்திருந்த றசல்ராஜ் (55), என்பவரை மடக்கி பிடித்து 6 குவார்ட்டர் மதுவையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து 3 பேர் மீதும் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

The post நித்திரவிளை அருகே மதுபானம் பதுக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nithravila ,Nithravilai ,Inspector ,Ramesh Mohan ,SIs Gnanasikamani ,Chandrakumar ,Special Unit ,Eight Stalin ,Ghikka ,
× RELATED முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்...