×

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

நாகர்கோவில், ஜூன் 24 : நாகர்கோவில் ரோஜாவனம் இன்டர் நேஷனல் பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா பள்ளி தலைவர் அருள்கண்ணன், பள்ளி துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலையில் நடந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் யூஜின் வரவேற்றார். பள்ளி கல்வி இயக்குநர் சாந்தி, பள்ளி நிதி இயக்குநர் சேது ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அருணாசலம் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்பாக ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளியில் மழலை குழந்தைகள் முதல் மேல்நிலை வகுப்பில் உள்ளவர்கள் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் யோகாசனம், சூரிய நமஸ்காரம், பிரணாயாமம் ஆகியவற்றின் செயல்விளக்கம் செய்தனர்.

பள்ளி மாணவர் ஆலோசகர் சுகுமாரி நன்றி கூறினார். பள்ளியின் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜூ, கோலம்மாள், பியூலா, சாந்தினி, ராதா உட்பட துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : International Yoga Day ,Rojavanam International School ,NAGARGO ,PRESIDENT ,ARULKANAN ,SCHOOL ,VICE- ,ARULJOTI ,Eugene ,School Director of ,Shanti ,
× RELATED ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி