×

தெள்ளாந்தி ஊராட்சியில் பழுதான சாலையில் வாழை நடும் போராட்டம்

 

பூதப்பாண்டி,ஜூன் 24: பூதப்பாண்டியை அடுத்துள்ள தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளாந்தி காலனி முதல் கேசவநேரி வரையிலான சாலையை சீரமைக்க கோரி கிராமசபை கூட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இன்னும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை.

இதை கண்டித்தும், உடையடி கிராமம் முதல் தென்பாறை வரையிலான குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கேட்டும் தெள்ளாந்தி பாஜ சார்பில் இல்லத்தார் தெரு சந்திப்பில் நேற்று சாலையில் வாழை நடும் போராட்டம் நடந்தது. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். பாஜ ஒன்றிய பொது செயலாளர் ராஜ சிங், ஒன்றிய பாஜ தலைவர் மகாதேவன் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தெள்ளாந்தி ஊராட்சியில் பழுதான சாலையில் வாழை நடும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Telandi panchayat ,Boothapandi ,Gram ,Sabha ,Tellandhi Colony ,Tellandhi Panchayat ,Boothpandi ,Kesavaneri ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை...