×

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி

மதுரை, ஜூன் 24: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வழங்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அரசு நூலகத்துறை சார்பில், பலதரப்பட்ட பயன்மிகு பயிற்சிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் நேற்று முன்தினம் மாலை சதுரங்க பயிற்சி நடத்தப்பட்டது. இலவசமாக நடந்த இப்பியற்சியில் 8 முதல் 18 வயது வரையிலான ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த இலவசப்பயிற்சி வழங்கப்படுகிறது. முன்னதாக, குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘லூகா’ என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதுதவிர, கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளான நேற்று மாலை 4 மணிக்கு முத்தமிழ் முற்றம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் ‘‘கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்” என்ற தலைப்பில் அவரது படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் நடைபெற்றது.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Library ,Madurai ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு